Tuesday, May 10, 2011

மகளின் மோபைலில் ஆபாசப் படம்: அதைப் பார்த்த தந்தை தற்கொலை !


(11-05-2011)
தனது மகளின் கையடக்க தொலைபேசியில் இருந்த ஆபாச வீடியோ காட்சிகளை தனது மனைவி, மகளுடன் பார்வையிட்ட தந்தை தன்னனைத் தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்று கொக்கரல்லை பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. கொக்கரல்லை ஜனபாகமன பிரதேசத்தில் வசிக்கும் 43 வயதுடைய ஜே.ஏ.சுகத்தபால எனப்படும் மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டவராவார்.

கொக்கரல்லை பிரதேச பாடசாலையில் மகள் கல்வி கற்றுக்கொண்டிருந்த போதே தந்தை தற்கொலை செய்து கொண்டுள்ளார். மகளின் கையடக்க தொலைபேசி பாடசாலை அதிபருக்கு வழங்கப்பட்டு சோதனை செய்யப்பட்ட போது அதில் ஆபாச வீடியோ காட்சிகள் இருந்தமை கண்டறிப்பட்டமையாக தெரிவிக்கப்படுகிறது. அதன் பின்னர் குறித்த அதிபர் மாணவியின் பெற்றோரை பாடசாலைக்கு வரவழைத்து அவர் முன்னிலையிலேயே குறித்த வீடியோ காட்சிகளை பெற்றோருக்கு காண்பித்துள்ளார்.

இதனையடுத்து விரைந்து வீட்டுக்கு சென்ற தந்தை கைத்துப்பாக்கியை எடுத்து தன்னைத்தானே சுட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். சம்பவம் தொடர்பில் கொக்கரல்லை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட குழுவினர் மேலதிக விசாரணை நடத்தி வருகின்றனர். குறித்த பள்ளி அதிபர் சற்றும் பின் விளைவுகளை யோசிக்காது நடந்துள்ளார்.

Sunday, May 8, 2011

லேடனைக் கொன்ற வீரர்களுக்கு ஒபாமா பாராட்டு


(09-05-2011)

அல் காய்தா தலைவர் பின் லேடனைக் சுட்டுக்கொன்ற அமெரிக்க கமாண்டோ வீரர்களை ஜனாதிபதி பராக் ஒபாமா நேரில் சந்தித்து பாராட்டியுள்ளார்.

இந்நிகழ்வில் அமெரிக்க ஜனாதிபதியால் வழங்கப்படும் மிக உயரிய பாராட்டுப் பத்திரத்தையும் ஒபாமா வீரர்களுக்கு வழங்கினார்.

';மிகச் சிறப்பாக உங்கள் பணியைச் செய்து முடித்தீர்கள், அமெரிக்க மக்கள் சார்பாகவும் உலக சமுதாயத்தின் சார்பாகவும் உங்களுக்கு என்னுடைய வணக்கங்கள்" என்று லேடனைக் கொன்ற படையினரைப் பார்த்துக் கூறினார் ஒபாமா தனது கருத்தை தெரவித்தார்.

ஆப்கானிஸ்தானில் பணியாற்றிவிட்டுத் திரும்பிய அமெரிக்க வீரர்களையும் பின் லேடனைக் கொன்ற வீரர்களையும் அந்த நிகழ்ச்சியில் சந்தித்த ஒபாமா அமெரிக்க வீரர்களின் ஈடு இணையற்ற தியாகம், வீரம், அர்ப்பணிப்பு உணர்வு காரணமாக இது சாத்தியமாயிற்று என்றார். இதேவேளை அல் காய்தா மட்டும் அல்லது தலிபான்களையும் ஒடுக்க வேண்டும் என்று வலியுறுத்திய அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் ராபர்ட் கேட்ஸ் முல்லா உமர் என்ற தலிபான் தலைவர் பின் லேடனுக்கு நெருக்கமாக இருந்தார், இனி என்ன ஆகும் என்று பார்க்க வேண்டும் என்றார். ___ E-mail to a friend